முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

15 இலட்சத்தை கடந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டம்பர் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 15 இலட்சத்து 67 ஆயிரத்து 7 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் 31,885 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகாரசபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 

அதன்படி, இந்தியாவிலிருந்து 3 இலட்சத்து 95 ஆயிரத்து 377 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1 இலட்சத்து 52 ஆயிரத்து 625 பேரும், சீனாவிலிருந்து 1 இலட்சத்து 2 ஆயிரத்து 473 பேரும், ஜேர்மனியிலிருந்து 91 ஆயிரத்து 763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், செப்டம்பர் மாதம் முதல் ஆறு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாகவும் இந்தியா பதிவாகியுள்ளது.

குறித்த ஆறு நாட்களில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 9,897 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/the-number-of-foreign-tourists-has-crossed-15-million-1789297779

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்