முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமை!

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்த மின்விசிறிகள் இயங்க வைக்கப்படவில்லை.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது திணைக்களங்களை சேர்ந்தவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்த மின் விசிறிகள் அனைத்தும் இயங்க வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்த இடங்களில் இருந்த மின்விசிறிகள் இயங்க வைக்கப்படவில்லை.

சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு முன்பாக பொலிஸார் அமர்ந்திருந்த நிலையில் அந்த இடத்து மின்விசிறிகளும் இயங்க வைக்கப்பட்டிருந்தன.

குறித்த மண்டபத்தில் இருந்த சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெப்பத்தை தாங்க முடியாமல் கைகளில் இருந்த கடதாசி மட்டைகளால் விசுறுவதை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் அந்த இடத்தில் இருந்த மின் விசிறிகளை இயங்க வைக்குமாறு அங்கிருந்த ஒருவர் கூறிய நிலையிலும் அந்த கோரிக்கையை பிரதேச செயலக உத்தியோகத்தர் அலட்சியப்படுத்தி, மின்விசிறியை இயங்க வைக்கவில்லை.

மக்களது வரிப்பணத்தில் திணைக்களங்கள் இயங்குகின்ற நிலையில் மக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுகின்றமை அங்கிருந்தவர்களை வெறுப்புக்கு உள்ளிக்கியமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/right-denied-to-community-level-representatives-at-the-sandilipay-divisional-development-coordination-committee-meeting-1789384675

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.