புத்துயிர்க்கும் புது நகரம்’ என்ற தொனிப்பொருளில் மூதூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, சிரமதான பணி மூதூர் பாலநகரில் (15) இடம் பெற்றது.
இதன்போது, ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மயானங்கள் துப்புரவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ரி. தாஹிஸ் தலைமையில் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

