முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் திடீரென உயிரிழந்த இளம் வேட்பாளர்

புதிய இணைப்பு

மறைந்த யாழ். மாவட்ட தேர்தல் வேட்பாளர் செந்திவேல் தமிழினியனுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்றையதினம் (23) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான எனது அன்புச் சகோதரன் செந்திவேல் தமிழினியனியனின் (இனியவன்) மறைவுச் செய்தியை கலங்கிய மனதுடன் ஊடகங்களுக்கு அறியத்தருகிறேன்.

யாழில் திடீரென உயிரிழந்த இளம் வேட்பாளர் | Sudden Death Of Youth Candidate In Jaffna

எனது அரசியல் பயணத்திற்கு பெரும் ஆதரவுத்தளத்தை உருவாக்கி அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வடமராட்சி மக்களுக்கான அபிவிருத்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என முழு ஈடுபாட்டுடன் இனியவன் செயற்பட்டு வந்தார்.

வடமராட்சியைச் சேர்ந்த அனைத்து மக்களாலும் இலகுவாக அணுகக்கூடியவராகும், மக்களின் தேவைகள் அறிந்தவராகவும் விளங்கிய அவர், நேரகாலம் பாராது மக்களுக்காகவும், மக்கள் அரசியலுக்காகவும் எம்மோடு பயணித்தவர்.

இளமைக்கேற்ற துடிப்போடு, எந்தச்சூழலிலும் அனைத்து தரப்பினரையும் அணுகி வடமராட்சி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் முனைப்போடு செயற்பட்டார்.” என குறிப்பிட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

யாழ் (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த இளம் வேட்பாளர் இன்றையதினம் (23) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான செந்திவேல் தமிழினியன் என்ற வேட்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளம் வேட்பாளர் உயிரிழப்பு

திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் திடீரென உயிரிழந்த இளம் வேட்பாளர் | Sudden Death Of Youth Candidate In Jaffna

உயிரிழந்த இளம் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்திலேயே போட்டியிட இருந்தாதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேட்பாளரின் மறைவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தனது இரங்கலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sudden-death-of-youth-candidate-in-jaffna-1729659709

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.