முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனோயனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கமும்..!

சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோயனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கம் ஒன்றும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மக்களின் ஏற்ப்பாட்டில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நடைபவனியாக வவுனியா பெரிய பள்ளிவாசல் நோக்கிச்செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. 

பெரிய பள்ளிவாசலில்  மதியம் 12.30 மணியளவில் விசேட தொழுகை இடம்பெற்ற பின்னர், அனோயனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள், அனோயனின் விடுதலையை வலியுறுத்தி சவுதி,அமெரிக்கா,இந்தியா, உள்ளிட்ட தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள்,தமிழ்,முஸ்லீம் மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 

Source: https://samugammedia.com/a-walkathon-and-a-signature-campaign-in-vavuniya-demanding-anoyans-release-on-compassionate-grounds-1790160384

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்