அரசியல் சாசனத்தில் இருப்பவற்றை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் கடமை. அதனை நிறைவேற்றுமாறு நாம் அவரை கேட்போம்.அதற்காக அவருடன் பேச்சு நடத்துவோம்.அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது வேறுவிடயம்.
இவ்வாறு தெரிவித்தார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர்நாயகமும் ஜனாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
அதேவேளை 13 ஆவது திருத்த சட்டத்தை முற்றுமுழுதாக இல்லாதொழிக்க வேண்டுமென தெரிவித்த அநுர குமார திஸநாயக்கவே தற்போது ஜனாதிபதியாக வந்துள்ளார்.எனவே 13 ஆம் திருத்த சட்டத்தை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர் காண்டீபன் தெரிவித்தார்.
எனினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த விடயங்கள் காணொளியில்..
https://www.youtube.com/embed/3CfCtSF5_ao