முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாளை நடைபெறவிருந்த இலங்கை – இந்திய பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நாளை (25) இந்தியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது, அவ்வாறு நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இருதரப்பும் கலந்துரையாடுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டமிட்ட திகதியில் பேச்சுவார்த்தையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பினால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேச்சுவார்த்தைக்கான புதிய திகதியை இந்தியத் தரப்பு பின்னர் அறிவிக்கும் எனவும், புதிய திகதி அறிவிக்கப்பட்டதும் அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் விபரங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த பேச்சுவார்த்தை இலங்கைத் தரப்பினால் இரத்து செய்யப்படவில்லை என்றும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களாலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/tomorrows-sri-lanka–india-talks-have-been-postponed-1790246071

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்