முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க விஜித ஹேரத் நாளை நியூயோர்க் பயணம்!

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை சனிக்கிழமை நியூயோர்க் செல்கின்றார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கையைப்  பிரதிநிதித்துவப்படுத்தி அவர் உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 81 ஆவது அமர்வு செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடங்கியது. இதன் உயர்மட்ட வாரம் மற்றும் பொது விவாதம் செப்டெம்பர் 22 முதல் 28 வரை நியூயோர்க்கில் நடைபெறுகின்றது.

எதிர்வரும் 28 ஆம் திகதி நிகழ்த்தப்படவுள்ள அமைச்சர் விஜித ஹேரத்தின் உரை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்கும், உலகளாவிய அரங்கில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளை வெளிப்படுத்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று  அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியூயோர்க்கில் இரு தரப்பு சந்திப்புகளிலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.

குறிப்பாக சவூதி வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது சிவராசா அனோஜன் விடயம் சம்பந்தமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 80 ஆவது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்று உரையாற்றியிருந்த நிலையில், இந்த ஆண்டு உயர்மட்ட வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் விஜித ஹேரத் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

Source: https://samugammedia.com/vijitha-herath-to-travel-to-new-york-tomorrow-to-participate-in-the-un-general-assembly-session-1790305117

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்