முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குற்றவாளிகளுக்கு சார்பாக செயற்பட அநுர அரசாங்கம் முயற்சி: கம்மன்பில சுட்டிக்காட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் சார்பாக செயற்படவே ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க அநுர அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) சுட்டிக்காட்டியுள்ளார்.

புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று(30.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

மேலும் அவர் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகைளை மேற்கொண்ட அல்விஸ் மற்றும் இமாம் குழு அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

குற்றவாளிகளுக்கு சார்பாக செயற்பட அநுர அரசாங்கம் முயற்சி: கம்மன்பில சுட்டிக்காட்டு | Easter Attack Anura Government Udaya Gammanpila

இவ்விரு அறிக்கைகளையும் புறக்கணிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் அடிப்படையற்றதுடன், சிறுபிள்ளைத்தனமானது. 

ஊடக சந்திப்பை நடத்தி அறிக்கைகளை புறக்கணிப்பதாக குறிப்பிடாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சென்று புறக்கணிப்பதற்கான காரணத்தை அரசாங்கம் ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும்.

பிரதான குற்றவாளிகள்

குண்டுத்தாக்குதலின் பிரதான குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன, சானி அபேசேகர ஆகியோரை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த மற்றும் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.

குற்றவாளிகளுக்கு சார்பாக செயற்பட அநுர அரசாங்கம் முயற்சி: கம்மன்பில சுட்டிக்காட்டு | Easter Attack Anura Government Udaya Gammanpila

குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான மொஹமட் இம்ராஹிமை பாதுகாப்பதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர தலைமையில் முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்