சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு கோள்கள் தொடர்ச்சியாக தென்படுகின்ற ஒரு அரிய வானியல் நிகழ்வு இந்நாட்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, தொலைநோக்கிகள் மூலம் கோள்களின் அணிவகுப்பைப் பார்ப்பதில் பொதுமக்களும் பங்கேற்கக்கூடிய இரவு வான கண்காணிப்பு முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
குறித்த முகாமானது, இன்று (28) மாலை 6.20 மணி முதல் இரவு 8.00 மணி வரை கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வான கண்காணிப்பு
பொதுமக்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகள் பெறப்பட்டதால், கொழும்பு பல்கலைக்கழக வானியல் சங்க மாணவர்களால் இன்று கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இரவு வான கண்காணிப்பு முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் இந்த வான கண்காணிப்பு முகாம் இரவு 8 மணிக்கு முடிவடைகிறது, மேலும் வானம் தெளிவாக இல்லாவிட்டால் மக்கள் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கிரக அணிவகுப்பு
இதேவேளை, இந்த அரிய நிகழ்வை வீட்டில் இருந்தே பார்க்க முடியும் என்றும் கோள்களில், புதன், வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகியவை நிர்வாணக் கண்ணுக்குத் தெரியும், அதே நேரத்தில் சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை அடையாளம் காண ஒரு தொலைநோக்கி தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, கிரக அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு 2040 இல் மீண்டும் தெரியும் என்று நாசா மேலும் குறிப்பிட்டுள்ளது.
You may like this
https://www.youtube.com/embed/FHoifofTjIc