முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழா ! பக்திப் பரவசத்தில் வடமராட்சி

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் திருவிழாக்களின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று முற்பகல் 8 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நாளை சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் கற்கோவளம் வங்கக்கடலில் வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் பட்டுத் தீர்த்தத்துடன் இந்த ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது.

தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதி கருதி, ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிதண்ணீர் வசதிகள் மற்றும் அன்னதான மடங்களில் விசேட அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, வடபிராந்திய பருத்தித்துறை டிப்போ மற்றும் வடமராட்சி சிற்றூர்தி சேவைச் சங்கம் ஆகியவை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளன.

மேலும், இந்த ஆலய உற்சவ காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் அந்தப் பகுதியில் விசேட ஒரு வழிப் போக்குவரத்துச் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/vallipuram-alwar-temple-chariot-festival-vadamarachchi-immersed-in-devotional-ecstasy-1790304059

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்