‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான இளம் தலை முறைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு பாரிய செயற்திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று (28) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் ‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில் இளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி அடம்பன் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சோசலிச இளைஞர் சங்க மா நாட்டின் பிரச்சார முதற்கட்ட பணியாக இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி அடம்பன், ஆண்டாங்குளம், வட்டக்கண்டல் போன்ற பிரதேசங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற இருக்கும் சோசலிச இளைஞர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவர்களை அழைப்பதற்கு குறித்த மோட்டார் பைக் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

