கொழும்பு (Colombo) கோட்டை மற்றும் யாழ் (Jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடருந்து திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முழுமையாக குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையில் ஈடுபடுவதுடன் ஒரு பயணத்திற்கான கட்டணம் 3,200 ரூபா என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை
அந்தவகையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட intercity தொடருந்து இங்கு குறிப்பிட்ட நாட்களில் சேவையில் ஈடுபடும்.
கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் தொடருந்து 10, 13, 14, 15, 20, 24, 27 மற்றும் 31 ஆகிய திகதிகளில் விசேட சேவையில் ஈடுபடவுள்ளது.
இதற்கமைய குறித்த தொடருந்து காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் இதேவேளை பகல் 1.50க்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.