புதுப்பேட்டை
நடிகர் தனுஷ், ஆரம்ப கட்டத்தில் பல கஷ்டங்கள், மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்டு இப்போது தன்னை சிறந்த நடிகராக நிரூபித்துக் காட்டியவர்.
இவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த படங்களில் ஒன்று தான் புதுப்பேட்டை.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சோனியா அகர்வால், சினேகா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சீரியல் நடிகையை கத்தியால் குத்திய அவரது கணவர்… மருத்துவமனையில் பரிதாபமான நிலையில் நடிகை
கேங்ஸ்டர் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்றாலும் இப்போது க்ளாசிக் படம் என கொண்டாடப்படுகிறது.
படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பை தாண்டி படத்தில் யுவனின் இசையும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ரீ-ரிலீஸ்
தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறதாம். வரும் ஜுலை 26ம் தேதி புதுப்பொலிவுடன் 4K தரத்தில் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.