சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இப்படம் வரும் மே 1 – ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
சிக்ஸ் பேக் விவகாரம், சூர்யா அல்ல தனுஷ்தான்.. நடிகர் விஷால் பதிலடி
ஹிட் காம்போ
இந்நிலையில், சூர்யாவின் 46-வது படம் குறித்து அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.