ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த பிரபல சிங்கள சினிமா நடிகை தமிதா அபேரத்ன, இன்று அக்கட்சியில் இருந்து முற்றாக விலகிக்கொண்டுள்ளார்.
தமிதா அபேரத்னவுக்கு எதி்ர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும் கடைசி நேரத்தில் தமிதாவுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கடும் அதிருப்தியில் இருந்த தமிதா அபேரத்ன, இன்று அக்கட்சியில் இருந்தும் முற்றாக விலகிக்கொண்டுள்ளார்.
புதியதொரு அரசியல் கட்சி
அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலில் அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய முன்னணியில் அவர் இணைந்து கொண்டுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தமிதா அபேரத்ன அறிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய முன்னணியானது சட்டத்தரணி மொஹான் பெரேராவைத் தலைவராகக் கொண்டுள்ள புதியதொரு அரசியல் கட்சியாகும்.