அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது, மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரண்டு படத்தில் நடித்துள்ளார்.
இதில், விடாமுயற்சி படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் விட்டது.
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. அன்ஷிதா போட்டுடைத்த ரகசியம்
சினிமா, ரேஸிங் என பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதில் அஜித் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் புத்தாண்டையொட்டி சிங்கப்பூரில் அஜித், ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள் அங்கு கொண்டாடினர்.
வைரலாகும் வீடியோ
அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு ஷாலினி, அனௌஷ்கா மற்றும் ஆத்விக் மூவரும் சென்னை திரும்பியுள்ளனர்.
அதற்கு முன்னதாக அஜித், அவர்களை சிங்கப்பூரில் வைத்து கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,
Most gorgeous Visual in internet Today❤😍😍😍😍😍#Ajithkumar #VidaaMuyarchi pic.twitter.com/kKRAQ49Bjx
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) January 5, 2025