ஆலியா பட்
19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஆலியா பட்.
Student of the Year திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகர்ளை கவரும் வகையில் நடித்து வந்த ஆலியா பட் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.
என்ன ஆனது?
இந்நிலையில், புகைப்படக்கலைஞர்கள் மீது ஆலியா பட் கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது, டென்னிஸ் விளையாட வந்த ஆலியா, காரில் இருந்து இறங்கியவுடன் புகைப்படக் கலைஞர்களால் சூழப்பட்டார்.
இதனால் கடுப்பான ஆலியா பட்
‘உள்ளே வராதீர்கள், தயவுசெய்து வெளியே செல்லுங்கள். இது உங்கள் வீடு அல்ல’ என்று கூறியுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source: https://cineulagam.com/article/alia-bhatt-video-goes-viral-on-social-media-1755413997

