முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்கு எண்ணும் பணியில் முறைக்கேடு: குற்றம் சுமத்தும் ஐக்கிய மக்கள் சக்தி

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றியை மதிப்பதாகவும், எனினும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சியான ஜனரஜ பெரமுன கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து வாக்கு எண்ணப்படும் வரையில் சில அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சம்பிக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் பணியில் முறைக்கேடு: குற்றம் சுமத்தும் ஐக்கிய மக்கள் சக்தி | Allegations Of Election Fraud Surface

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணப் படுவதற்கு முன் சில வாக்கெண்ணும் அதிகாரிகள் வாக்குச் சீட்டுகளில் விருப்பு வாக்குகளை பதிவு செய்துள்ளமையால் எமது வேட்பாளருக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு அமைய 42 வீத வாக்குகளை பெற்று அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, அவருக்கு எதிராக 58 வீதமான மக்கள் வாக்களித்துள்ளார் என்பதையும் அநுரகுமார நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்