முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்! மக்களுக்கும் அழைப்பு..

மட்டக்களப்பில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையினை
மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முயற்சிகளை
முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி
பகுதியில் உள்ள தொல்பொருள் இடம் பகுதிக்கு சென்று நேரலையொன்றை செய்துள்ளதுடன்
அங்கு விகாரையினை அமைக்கமுன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 மதங்களிடையே பிரச்சினை

பன்குடாவெளி பிரதேசம் நூறு வீதம் இந்துக்கள்,கிறிஸ்தவ மக்கள் வாழும்
பகுதியாகும்.அங்கும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் எந்த பௌத்த மக்களும்
வாழவில்லை.
ஆனால் அங்கு சுமார் 1000வருடத்திற்கு முற்பட்ட தொல்பொருள் சின்னம்
காணப்படுகின்றது.

மட்டக்களப்பில் குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்! மக்களுக்கும் அழைப்பு.. | Ambitiya Sumanaratna Thera Create Confusion Again

அது எந்த மதத்திற்குரியது என்பது தொடர்பிலான எந்த தகவலும்
தெரிவிக்கப்படாத நிலையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறித்த
இடம்பௌத்தர்களுக்கு உரியது என பல காலமாக மதங்களிடையே பிரச்சினைகளை
ஏற்படுத்திவருகின்றார்.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு அப்பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறித்த பகுதி
பௌத்த மதத்திற்குரிய பகுதி அங்கிருந்து அனைவரும் வெளியேறவேண்டும் என்று
கூறியதுடன் அங்கிருந்த தொல்பொருள் அதிகாரிகளும் தாக்கப்பட்டிருந்தனர்.

 பாரிய அச்சுறுத்தல்

இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களம்
அதனை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் விவசாயிகள் மக்கள் அந்த பகுதிகளில் தமது
செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பில் குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்! மக்களுக்கும் அழைப்பு.. | Ambitiya Sumanaratna Thera Create Confusion Again

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் (19)பன்குடாவெளி பகுதிக்கு சென்ற அம்பிட்டிய
சுமனரத்ன தேரர் குறித்த பகுதியில் புத்தர் சிலையொன்றை அமைத்து விகாரை
அமைக்கப்படவேண்டும் என்ற அழைப்பினை சிங்கள மக்களுக்கு விடுத்துள்ளார்.

இது எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறும்
நிலையுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்