அமெரிக்காவில் விமானப்படை ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்துக்களாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்று (28) மதியம் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், F-35 Lightning II என்ற போர் விமானமே விபத்தில் வெடித்து சிதறியுள்ளது.
ஏற்பட்ட கோளாறு
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை தெரிவித்துள்ளது.
A U.S. Air Force #F35 fighter jet #crashed at #Eielson AFB, Alaska. The accident occurred during landing. The pilot is safe and was taken to Bassett Hospital. An investigation is underway.
The crash video starts with the A/C inverted, indicating very low airspeed at ejection. pic.twitter.com/0BDdPvXe7I— Eli Zusman (@muki46) January 29, 2025
இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளதாகவும் விமானம் கீழே விழுவதற்கு முன் விமானி அதிலிருந்து எட்ஜெக்ட் ஆகி வெளியே குதித்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த விமானி பாசெட் இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.