அரகலய போராட்டத்திற்கு முன் அநுரகுமார திசாநாயக்காவினுடைய (Anura Kumara Dissanayake) தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) ஜனாதிபதித் தேர்தலிலே வெற்றிபெற முடியுமா என சிந்தித்து கூட இருக்க மாட்டார்கள் என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரகலய மூலம் வந்த அரசியல் மாற்றம் ஒன்றின் காரணமாகத்தான் அநுர இன்று ஆட்சியில் இருக்கின்றார்.
இந்த போராட்டம் வலுவடையும் போது அரகலய பக்கம் இருந்த தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் போராட்டம் தொய்வடையும் போது ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டார்கள்.
எனவே, இந்த அரகலய போராட்டத்திற்கு பின்னால் தேசிய மக்கள் சக்தியினர் இருந்தார்கள் என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும், அரசியலின் முழு முறைமையும் மாற்றப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றனர் என்றும் சுவஸ்திகா குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…