சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துக்கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பட்டலந்த கமிஷன்’ என்றும் அழைக்கப்படும் ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் “பட்டலந்த சித்திரவதை அறை” தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் சமூகத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.
1980களின் பிற்பகுதியில் அப்போதைய அரசாங்கத்தால் செய்யப்பட்ட சட்டவிரோதக் கொலைகள், கொடூரமான சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோதக் காவல்களுக்காக பட்டலந்த தகனக்கூடம் தொடர்ந்து பேசப்படும் இடமாகும்.
1988 மற்றும் 1990 க்கு இடையில் படலந்த வீட்டுவசதி திட்டத்தின் போது பல்வேறு நபர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
17 ஆண்டுகால ஐ.தே.க ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, “ஊழலுக்கு எதிராக, பயங்கரவாதத்திற்கு எதிராக” என்ற தேர்தல் முழக்கத்துடன் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் கொலைகளுக்கு நீதி வழங்குவதாகும்.
அதன்படி, அந்த நேரத்தில் படலந்தா சித்திரவதைக் கூடம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரணில் விக்ரமசவின் கருத்துக்களால் தூசுத்தப்பட்டுள்ள பட்டலந்த விவகாரம் ஈழத்தமிழர் வரலாற்றிலிலுள்ள முக்கிய விடயங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு பல்வேறு விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மேலும், பட்டலந்த வதை முகாம் விவகாரம் தற்போது வெளிவந்துள்ளமை ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,