பிக்பாஸ்
பிரம்மாண்டமான பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய சினிமாவிற்கு ஒரே நேரத்தில் தான் வந்தது.
தமிழ், தெலுங்கில் வெற்றிகரமாக அடுத்தடுத்து 8 சீசன்கள் ஒளிபரப்பானது.
பிக்பாஸ் தமிழ் ஷோ ஆரம்பித்ததில் இருந்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வந்தார். கொரோனா காரணமாக ஓய்வில் இருந்தபோது ரம்யா கிருஷ்ணன் ஒரு எபிசோட் வந்தார்.
தனது மனைவியுடன் பிரபல திரையரங்கில் குட் பேட் அக்லி பார்த்த சிவகார்த்திகேயன்.. வீடியோவுடன் இதோ
அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி இருந்தார்.
கடைசியாக ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் 8வது சீசனில் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக களமிறங்கி கலக்கியிருந்தார், 8வது சீசனும் ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது.
புதிய தொகுப்பாளர்
தமிழ் இல்லை தெலுங்கு பிக்பாஸ் 9வது சீசன் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார், அதன்பின் நானி தொகுத்து வழங்கினார். அவரும் ஒரே சீசனோடு வெளியேற தொடர்ந்து 5 சீசன்கள் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது 9வது சீசனில் இவருக்கு பதில் புதிய தொகுப்பாளர் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
9வது சீசனை தொகுத்து வழங்கப்போவது விஜய் தேவரகொண்டா அல்லது ராணா டக்குபதி என கூறப்பட்டு வந்த நிலையில் புதியதாக நந்தமுரி பாலகிருஷ்ணா பெயர் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.