எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கு எழுத்துபூர்வமாக வழங்கியுள்ளார்.
குறித்த அறிவிப்பில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.