முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வெளியிடுவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுளின் (immunoglobulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தன் மீதான வழக்கு விசாரணைகள் நிறைவு செய்யப்படும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இதேவேளை குறித்த மனு மீதான உத்தரவு இன்று (04) அறிவிக்கப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தீர்ப்பை அறிவிப்பது ஒக்டோபர் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.