திருகோணமலையில் (Trincomalee) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை தபால் நிலையை வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திர குமார் (S. Kajendran) கட்சியின் முக்கியஸ்தர்கள் இணைந்து குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், அம்பாறை (Ampara) திருக்கோவில் (Thirukkovil) பகுதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய துண்டுபிரசுர விநியோகம் காவல்துறையினரினால் நேற்றைய தினம் (24) தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.