முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அழிவின் அறிகுறி…! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின்(United States) – கலிபோர்னியா கடற்கரையில் அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படும் அழிவு நாள் மீன் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒர்ஃபிஷ்(Oarfish) என அழைக்கப்படும் இந்த மீனினம் சுனாமி அல்லது பூகம்பம் போன்ற பேரழிவுக்கு அறிகுறியாக அமைந்துள்ளமையாகும்.

புராண நம்பிக்கை

ஜப்பானிய புராணக்கதையின் படி,  இந்த மீன் வரவிருக்கும் பேரழிவை குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது. 

கடந்த 2011ஆம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த மீன் கடற்கரையில் 20க்கும் மேல் தோன்றிய பிறகு, ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்துள்ளது. 

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு | Doomsday Fish Found On California Beach

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் அழிவு நாள் மீன் (Oarfish) கரை ஒதுங்கியுள்ளது. 

குளிர்ச்சியான உயிரினம்

சுமார் 9 முதல் 10 அடி நீளம் கொண்ட இந்த குளிர்ச்சியான உயிரினம், ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக கரை ஒதுங்கியுள்ளது. 

வெள்ளி நிற மற்றும் அகலமான கண்கள் கொண்ட இந்த உயிரினம், மிகவும் குறைவான வெளிச்சம் உள்ள மெசோபெலாஜிக் மண்டலத்தில் ஆழமாக வாழுகின்றனவையாகும். 

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு | Doomsday Fish Found On California Beach

அழிவு நாள் மீன்கள்

சில புராணக்கதைகள் இந்த மீன் இயற்கை பேரழிவுகள் அல்லது எதிர்கால பூகம்பங்களை முன்னறிவிக்கும் என்று நம்புகின்றன.

ஸ்கிரிப்ஸ் நிறுவனத்தின்(The Scripps Institution) கூற்றுப்படி, 1901 முதல் கலிபோர்னியா கட்டுரையில் 21 அழிவு நாள் மீன்கள் தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆராய்ச்சியாளர் பென் ஃப்ரேபிள்(Ben Frable), இந்த மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் சரியாக தெரியவில்லை.

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு | Doomsday Fish Found On California Beach

எனினும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்ய இது ஒரு நம்ப முடியாத வாய்ப்பு.

கடலின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த முறை சான் டியாகோ (San Diego) நகரின் லா ஜொல்லா கோவ்வில் 12 அடி நீளம் கொண்ட அழிவு நாள் மீன்(Oarfish)தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்