Home உலகம் டொனால்ட் டிரம்புடன் இணைந்து நடனமாடும் எலான் மஸ்க் : வைரலாகும் காணொளி

டொனால்ட் டிரம்புடன் இணைந்து நடனமாடும் எலான் மஸ்க் : வைரலாகும் காணொளி

0

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் (Elon Musk) அவரும் டொனால்ட் ட்ரம்ப்பும் (Donald Trump) நடனமாடுவது போன்ற AI காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 AI காணொளி 

அந்த பதிவில், “எங்களை வெறுப்பவர்கள் இதனை AI என்று சொல்லக்கூடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் அலங்கார உடை அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான உடையில் நடந்து வரும் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version