வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், கடற்றொழில் அமைச்சரையும் சந்தித்துப் பேச கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இது தொடர்பான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளன.
அதன் பிரகாரம் முதற்கட்டமாக எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இந்த அமைப்புகள் சந்தித்துப் பேசவுள்ளன.
இணக்கப்பாடு
அதே போன்று தேசிய மக்கள் சக்தியால் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை சந்தித்துப் பேசுவதற்கும் கடற்றொழிலாளர் அமைப்புகள் இணக்கம் கண்டுள்ளன.
ஜனவரி மாத இறுதியில் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்துப் பேசுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.