இனப்படுகொலை நடந்தமைக்கு செம்மணியே தெளிவான ஆதாரம் என சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கையெழுத்துப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 150 எலும்புக்கூடுகளில் 96 வீதமானவற்றில் ஆடைகள் இல்லை எனவும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கையிலுள்ள விசாரணை அறிக்கைகளில் இருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் எனவும் அவர் அரசுக்கு அறிவுருத்தியுள்ளார்.
இனப்படுகொலை போர்க்குற்றங்கள் தொடர்பில் பலகாலம் பேசுகிறோம் அதற்கு தெளிவான ஆதாரமாக செம்மணி மனிதப்புதைகுழிகள் அமைந்துள்ளது எனவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.
இது தற்போது பேசு பொருளுக்குள்ளாகி இருக்கும் நிலையில், இவ்வாறு தமிழர் மற்றும் தென்னிலங்கை பகுதிகளில் பேசுபொருளுக்குள்ளாகி இருக்கும் மேலும் சில முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்,
https://www.youtube.com/embed/0vwzd1YZXk8

