ஹமாஸ் (Hamas) அமைப்பு தன்னிடம் பணயக்கைதிகளாகயிருந்தவேளை உயிரிழந்த நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.
இதில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
4 வயது மற்றும் 9 மாத பிள்ளைகளும் இதில் உள்ளடங்குகின்றனர். ஹமாஸ் – இஸ்ரேல் யுத்த நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்கள் இவ்வாறு கையளிக்கப்படும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த சம்பவம் இஸ்ரேலியர்களை கவலைக்கு உட்படுத்தியுள்ளதாக பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாதாக வெளிநாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறித்த பணயக்கைதிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும் இஸ்ரேல் இதனை உறுதி செய்யவில்லை.
https://www.youtube.com/embed/cTkR_VeZ1VU