முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உபவிதிக்கு முரணாக கூட்டம் – தமிழரசுக் கட்சிக்குள் புதிய பிரச்சினை

கடந்த 2025, அக்டோபர் 21 அன்று, காங்கேசன்துறை தொகுதி கிளையின் பழைய
உறுப்பினர்களுக்கு தெரியாமல், உபவிதிக்கு முரணாக கூட்டம் இடம்பெற்றதாக
காங்கேசன்துறை தொகுதிக்கிளையின் தற்போதைய தலைவர் சா.செ.இளங்கோபனால் கடிதம்
ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோருக்கும்,
மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கடிதத்தில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளரான
ஆகிய தங்களின் முன்னிலையில் 21.10.2025 அன்று மாவட்டபுரத்தில் இலங்கை
தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை நிர்வாகத் தெரிவுக் கூட்டம்
நடைபெற்றதாக ஊடகங்கள் மூலம் அறிகின்றோம்.

புதிய கிளை

கணிசமான தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தொகுதியில் உள்ள போதும்,
இக்கூட்டத்தில் வலி-வடக்கு பிரதேச சபையுடன் தொடர்புடைய ஒரு சில உறுப்பினர்கள்
மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

உபவிதிக்கு முரணாக கூட்டம் - தமிழரசுக் கட்சிக்குள் புதிய பிரச்சினை | Ilankai Tamilarasu Katchi Conflicts

இதனால் இக்கூட்டத்தில் வலி-வடக்கு பிரதேச
அபிவிருத்தி தொடர்பான தெளிவின்மையும் தோன்றியுள்ளது.

எப்படியிருப்பினும் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக யாப்பின் அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்ட தொகுதிக் கிளை ஒன்று இருக்கும் போது அக்கிளை உறுப்பினர்களுக்கு
தெரியப்படுத்தாமல் இன்னொரு புதிய கிளை அமைக்கப்பட்டிருக்க முடியாது என்றே
நம்புகின்றோம்.

கட்சியின் முக்கியஸ்தர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் கங்கேசன்துறைக் கிளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாக குழு என்ற பொறுப்புடன் 2025, ஒக்டோபர், 21ஆம் திகதி நடாத்தப்பட்டதாக
கூறப்படும் நிர்வாகத் தெரிவு கட்சியின் யாப்பிற்கு அமைவாக நடாத்தப்படவில்லை
என்றும் அதன் காரணமாக அது செல்லாது என்பதையும் கட்சியின் யாப்பின் படி
தேர்தல்கள் தடைபெறும் வரை கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளையின்
நிர்வாகமாக 02.12.2023 அன்று தெரிவான உறுப்பினர்கள் தொடர்ந்து செயற்பட எம்மை
தேர்ந்தெடுத்த மூலக்கிளை உறுப்பினர்களுக்கும் அந்தத் தெரிவின் போது கலந்துகொண்ட
கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம்.

உபவிதிக்கு முரணாக கூட்டம் - தமிழரசுக் கட்சிக்குள் புதிய பிரச்சினை | Ilankai Tamilarasu Katchi Conflicts

யாப்பை மீறும் செயற்பாடுகள் கட்சிக்குள் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். அத்துடன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
மறியாதையுடன் சமர்பிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதம் தொடர்பாக சாதகமான பதில் இல்லை எனில் இன்னொரு வழக்கு தமிழரசுக் கட்சி
பதில் தலைவர், பதில் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.