இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஒகஸ்ட் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த நான்கு நாள் பயிற்சி ஆட்டத்திற்கு பதிலாக, தற்போது மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி ஒகஸ்ட் 7ஆம் திகதி கொழும்பில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி
இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஒகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஒகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற உள்ளது.
Source: https://ibctamil.com/article/indian-team-prepares-for-test-series-against-sl-1785620380

