நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அப்படத்திற்கு பிறகு அவர் நடித்த டிக் டிக் டிக், சங்கதமிழன், திமிரு புடிச்சவன் என தமிழில் தொடர்ந்து நடித்தவர் தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக 2023ம் ஆண்டு இவரது நடிப்பில் படம் வெளியானது, அதன்பின் சினிமா பக்கம் அதிகம் தலைக்காட்டவில்லை.
காதலர்
இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ், ரஜித் இப்ரானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலர் என அறிவித்தார். ரசிகர்கள், பிரபலங்கள் எல்லோரும் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் காதலர் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது நிவேதா பெத்துராஜின் காதலர் ரஜித் இப்ரான், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜுலியின் முன்னாள் காதலர் என கூறப்படுகிறது.