முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதுகம ஷானின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத ஆத்திரத்தில் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல்

பிரபல பாதாள உலகக்கும்பல் உறுப்பினரான மதுகம ஷான் என்பவரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மதுகம ஷான், தற்போதைக்கு இலங்கையில் இருந்து தப்பியோடி துபாயில் தலைமறைவாக வசித்து வருகின்றார்.

வேண்டுகோள் முன்வைப்பு  

இந்நிலையில், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது தனது மனைவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி மூலம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு மதுகம ஷான், ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுகம ஷானின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத ஆத்திரத்தில் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல் | Madhugama Shan Wife Election Chance World Canopy

எனினும், ஜகத் விதான எம்.பி. அதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதே போன்று மதுகம ஷானுக்கு நெருக்கமான வேறொரு பெண் ஜகத் விதான எம்.பியின் நிறுவனமொன்றில் பணிபுரியும் நிலையில் அவருக்கு அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜகத் விதான எம்.பி.யிடம் மதுகம ஷான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதற்கும் ஜகத் விதான எம்.பி. மசியவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகவே மதுகம ஷான் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்