தொடர்ச்சியாக இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்ற அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.
2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் கூடுதல் நேரத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
அணிக்கு பெரும் பின்னடைவு
இதற்கிடையே, போட்டியின் கூடுதல் நேரத்தில் (90+3′ நிமிடம்) அர்ஜென்டினா வீரர் பெர்னாண்டஸ் முரட்டு ஆட்டம் விளையாடியதால், ரெட் கார்டு காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணத்தில் மிகுந்த உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது. அவர் உலகக் கோப்பை வரலாற்றில் 21 கோல்கள் அடித்துள்ளார். எனினும் பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 22 கோல்களுடன் அவரை முந்தியுள்ளார்.
அர்ஜென்டினா அணியின் தோல்வியைத் தொடர்ந்து உணர்ச்சிவசத்தால் கண்ணீர் சிந்திய மெஸ்ஸியின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஸ்பெயின் எங்களை விட சிறந்த அணி. அவர்கள் முழுமையாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்” என அர்ஜென்டினா அணித்தலைவர் Lionel Messi
Source: https://ibctamil.com/article/messi-cries-after-argentina-loses-world-cup-final-1784513533

