ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச நவகமுவ ஸ்ரீ பத்தினி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டும் என, தேர்த்திகடன் வைத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக நாமல் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த 16ஆம் திகதி முதல் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடும் நடவடிக்கையில் நாமல் ஈடுபட்டுள்ளார்.
மத நல்லிணக்கம்
அதற்கமைய விகாரைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என நல்லிணக்க அடிப்படையில் பல இடங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனார்.
இதேவேளை, நேற்றையதினம் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து நாமல் கலந்துரையாடினார்.
இதன்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.