புதிய அதிபரை நாடே நியமிக்கும் என அமைச்சர் மகிந்த அமரவீர (mahinda amaraweera) தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஆதரவுடன் அடுத்த அதிபர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எமது கைகளில்
“இப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி எமது கைகளில் உள்ளது, இந்த கட்சியை சட்டரீதியாக எமது கையில் எடுத்துள்ளோம், செயற்படுவதாகக் கூறும் எவரும் எமது கட்சியில் இல்லை.

இம்மாதம் 29ஆம் திகதி இரண்டாவது பொதுக்கூட்டத்தை வெல்லவாயவில் நடத்தவுள்ளோம்.புதிய கூட்டணியில் பெரும் எண்ணிக்கையிலான கட்சியினரும் பங்கேற்கலாம்.
நாங்கள் ஆதரிக்கும் தலைவரே அடுத்த அதிபர்
எதிர்காலத்தில் எமது கூட்டணியால் அடுத்த அதிபர் நியமிக்கப்படுவார். அடுத்த அதிபர் நிச்சயமாக நாங்கள் ஆதரிக்கும் தலைவரே என்று நான் உறுதியளிக்கிறேன்”. என அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/next-president-will-be-elected-s-l-freedom-party-1718789092

