2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
இவர்களில் 32 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 9 ஏ பெறுபேறுகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி அக்செயா அனந்தசயனன் சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
.