தபால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி, வேலைநிறுத்தத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
தங்கள் சீருடை கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்றும், மிதிவண்டிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
எனினும் கைரேகைகள் மற்றும் கூடுதல் நேரத்தைப் பற்றி மாத்திரம் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தபால் ஊழியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை முன்வைத்து அரைகுறை ஆடை அணிந்த அஞ்சல் ஊழியர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.