முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை

மட்டக்களப்பு(Batticaloa) வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது
செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை
செய்ய கோரி கையெழுத்து வேட்டையொன்று வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில்
சந்தேகத்தின்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 பயங்கரவாத தடைச் சட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரின்
விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும் நீதியான விசாரணை நடத்த கோரியும்
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும் இது தொடர்பில் ஐனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை | Protest In Valaichenai For Ex Mp Pillayan

இக் கையெழுத்து நடவடிக்கையானது மாவட்டத்தில் பல இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக
கோறளைப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை
உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மனுவொன்றும் வாசிக்கப்பட்டது.

 விசாரணைகள்

அந்த
மனுவில்,
எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த
வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று
மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச
பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும்
சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை | Protest In Valaichenai For Ex Mp Pillayan

ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்
பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய
நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என
குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.