முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைனுடனான அமைதிப்பேச்சுவார்த்தை : இறுதி நேரத்தில் புடின் எடுத்த அதிரடி முடிவு

இன்று வியாழக்கிழமை துருக்கி(turkey) இஸ்தான்புல்லில் நடைபெறும் உக்ரைன்(ukraine) போர் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள உள்ளதாக கிரெம்ளின் பட்டியலிட்ட பெயர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (vladimir putin)இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமை தாங்குவார் என்று கிரெம்ளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதாகவும், புடினை நேரில் சந்திப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) முன்பு கூறியிருந்தார், மேலும் நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுவதை உறுதி செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் கூறினார்.

உக்ரைனுடனான அமைதிப்பேச்சுவார்த்தை : இறுதி நேரத்தில் புடின் எடுத்த அதிரடி முடிவு | Putin Not On Attending Ukraine Peace Talks

உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை துருக்கிய தலைநகர் அங்காராவில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை சந்திக்க உள்ளார்.

டிசம்பர் 2019 முதல் புடினும் ஜெலென்ஸ்கியும் நேரில் சந்திக்கவில்லை. ரஷ்யாவும் உக்ரைனும் கடைசியாக மார்ச் 2022 இல் இஸ்தான்புல்லில் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தின.

அதன் பின்னர் உக்ரைனில் சண்டை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யப் படைகள் பெரும்பாலும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் அளவை மெதுவாக விரிவுபடுத்தியுள்ளன.

புடின் விடுத்த அழைப்பு

துருக்கியின் மிகப்பெரிய நகரத்தில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு “முன்நிபந்தனைகள் இல்லாமல்” புடின் ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார், அதற்கு முன்பு ஜெலென்ஸ்கி நேரில் செல்வதாகவும் ரஷ்ய ஜனாதிபதியும் பயணம் செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும் அறிவித்தார்.

உக்ரைனுடனான அமைதிப்பேச்சுவார்த்தை : இறுதி நேரத்தில் புடின் எடுத்த அதிரடி முடிவு | Putin Not On Attending Ukraine Peace Talks

சனிக்கிழமை ஐரோப்பிய தலைவர்கள் கியேவில் சந்தித்த பின்னர், மேற்கத்திய சக்திகள் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இஸ்தான்புல்லில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த புடினின் பரிந்துரைத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் இந்த வாய்ப்பை ஏற்க வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்த பிறகு, தானே அங்கு பயணம் செய்வதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

“கொலைகளை நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில்,” என ஜெலென்ஸ்கி ஒரு சமூக ஊடகப் பதிவில் எழுதியிருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.