Home உலகம் ஹரி ஆனந்தசங்கரி மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு : கண்டிக்கும் தமிழ் அமைப்புக்கள்

ஹரி ஆனந்தசங்கரி மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு : கண்டிக்கும் தமிழ் அமைப்புக்கள்

0

கனடாவின் (Canada)  பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு (Gary Anandasangaree) எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன.

முன்னதாக கனடாவில் உள்ள இரண்டு ஊடகங்களினால் எந்தவொரு ஆதாரமும் இன்றி ஹரி ஆனந்தசங்கரி விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என தெரிவித்து செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.

கனடாவில் நீதியமைச்சராக இருந்த ஹரி ஆனந்தசங்கரி தற்போது கனடாவின் பொதுப் பாதுகாப்பு துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையிலேயே அவர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

கனேடிய தமிழ் அமைப்பு

இந்த நிலையில் ஹரி ஆனந்தசங்கரி மீது வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டு கருத்துக்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன.

அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனவெறித் தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த தமிழ் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கனேடிய தமிழ் கூட்டு, கனடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் ஆனந்தசங்கரி மீதான மீதான விமர்சனங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.

கனேடிய தமிழ் கூட்டு

கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஆனந்தசங்கரி, கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே, அவர் மீது இனவெறித் தன்மைகொண்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும், அறிவிப்பு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். 

https://www.youtube.com/embed/JafaVX3od8M

NO COMMENTS

Exit mobile version