தோற்றால் வீட்டிலேயே இருக்குமாறு ஜனாதிபதி அநுர கூறியதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), பெரும்பான்மையான மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் நீர்கொழும்பு பொதுக்குழுவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) பெரும்பான்மை பலம் இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பான்மை வாக்குகள்
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் தோற்றேன்.
அவருக்கும் பெரும்பான்மையானவர்கள வழங்கவில்லை.
அப்படியானால் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி நான். பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி அவர்.
உங்களைப் போல் எனக்கும் பெரும்பான்மை இல்லை. எங்கள் இருவருக்கும் ஒரே நிலைமை தான்.” என்றார்.