கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்தப்படும் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டதாகத் தெரிவித்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பரித்த நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இன்னும் பிணையில்லை.. court
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடையை மீறி முன்செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அதனை தடுப்பதற்கு கடும் பிரயத்தனப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நீதிமன்றில் தொடரும் நிலையில், பிணை தொடர்பான எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

