யுத்தத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கான நிவாரணத்தை வரவு செலவு திட்டத்தில் முன்வைக்காத ஒரு அரசுக்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகுவதற்கு காரணம் தமிழ் தலைமைகள் மீதான மக்களின் அதிருப்தியே என மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை பெருமளவு பெருகுவதற்கு இரண்டு காரணம் உள்ளது, முதலாவது தமிழ் தலைமைகள் மீதான அதிருப்தி.
இரண்டாவது, ஒரு கூட்டம் தற்போதைய அரசால் வேலைவாய்ப்பு, தமிழ் மக்களுக்கான நலன்புரி மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என சாதாரண பாமர மக்களை விட கீழ் நோக்கிப்போகும் சிந்தனை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், தமிழ் அரசியல் தலைமைகளின் பின்னடைவு, தமிழ் அரசியல் எதிர்கால மாற்றம், வரவு செலவு திட்டம் மற்றும் அரசியலமைப்பு என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/piliiH4qcWQ?start=2436