முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதிகார ஜனாதிபதி முறை இலங்கை தீவின் சாபக்கேடு – சபா குகதாஸ்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கை நாட்டின் ஒரு சாபக்கேடு என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்
சபா குகதாஸ் (Saba Kugadas) தெரிவித்துள்ளார்.

அவரால் இன்றையதினம் (21.08.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்
மேலும், 

இதுவரை நாட்டின் பின்னடைவுக்கான செயற்பாடுகளையும் அதனை மேற்கொண்ட தரப்புக்களை
பாதுகாப்பதிலும் நிறைவேற்று அதிகாரம் பெரும் பங்கு வகித்துள்ளது.

சர்வாதிகார முறை

தேர்தல் காலங்களில் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என்ற கோசம்
மேலோங்கி இருந்தாலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவை மறக்கப்பட்டு இருப்பதை
விட கூடுதல் அதிகாரங்களை பெற முடியுமா என அதிகாரக் கதிரைக்கு வருபவர்கள்
சிந்திக்கின்றார்கள்.

சர்வதிகார ஜனாதிபதி முறை இலங்கை தீவின் சாபக்கேடு - சபா குகதாஸ் | Saba Kugadas About Presidential System

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு ஆட்சிப் பீடத்தில் இருக்கும்
போது தவறை ஒத்துக்கொண்டு பதவி விலகும் அரசியல் கலாசாரம் உருவாகினால் மட்டுமே
ஊழலையும் ஊழல் கூட்டத்தையும் ஒழிக்கலாம்.

மாறாக சர்வாதிகார முறை தொடர்ந்தால்
நாடு ஊழல்வாதிகளின் பாதுகாப்புக் கூடாரமாகவே மாறும். அத்துடன், இனவாதத்தை தணிய
விடாது தீயாக எரியவைக்கும்.

சர்வதிகார ஜனாதிபதி முறை இலங்கை தீவின் சாபக்கேடு - சபா குகதாஸ் | Saba Kugadas About Presidential System

நாட்டில் இனவாதம் மேலோங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் நாடு
பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த பின்னரும் நிறைவேற்று அதிகார ஐனாதிபதி
முறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை பேரினவாதிகள் மத்தியில்
புரையோடிப் போய் உள்ளது என்றால் நாடு முன்னோக்கி செல்ல வாய்ப்பே இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்