சாய் பல்லவி
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.
இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படி யாரும் இல்லை.. ஸ்லீவ்லெஸ் குறித்து பேசிய இயக்குநருக்கு சாய் பல்லவி பதில்
தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. மேலும், நாக சைதன்யாவுடன் `தண்டேல்` படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது.
ஷாக்கிங் தகவல்
இந்நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நாக சைதன்யா சாய் பல்லவி இயக்குநராக போவதாக கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” சாய் பல்லவி என்னிடம் அவருக்கு இயக்குநராகும் ஆசை உள்ளதாகவும். ஒரு நாள் அவர் படம் இயக்க உள்ளதாகவும். அந்த படத்தில் நடிக்க எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாகவும் கூறினார்” என்று தெரிவித்துள்ளார் நாக சைதன்யா.