ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளில் மத்தியஸ்தம் செய்வதற்கு தமக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு
வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் கட்சித் தலைமைப் பதவிகளில்
அண்மைய மாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்வதற்காக நேற்று (18)
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடிய போது, இந்த நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
யாழில் கடற்கரையில் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க புதிய திட்டம்
நீதிமன்ற உத்தரவு
கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga )தலைமையில் நடைபெற்ற அரசியல் பீட கூட்டத்தின் போது, தற்போதைய துணைத் தலைவர்
நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva), பதில் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற
உறுப்பினர் துமிந்த திசாநாயக்க(Duminda Dissanayake) பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குமாரதுங்கவின் முறைப்பாட்டையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட
நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் நீதிமன்ற உத்தரவும் எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்தின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் முறியடித்த அமெரிக்கா
இலங்கைக்குள் நுழைந்த ஈரானிய புலனாய்வு அமைப்புகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |